திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த மாதம் தரும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம் பக்தர்கள் தேவஸ்தானத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். தற்போது கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தேவஸ்தானம் ஆர்ஜித சேவை மற்றும் 300 ரூபாய் சிறப்பு தரிசன சேவை டிக்கெட் களை வெவ்வேறு தேதிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

அதன்படி மாதந்தோறும் 18 ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை சுப்ரபாதம் தரிசன டிக்கெட் வெளியிடப்படும். மேலும் 21 ஆம் தேதி ஆர்ஜித சேவை டிக்கெட் வெளியிடப்படும். பின்னர் ஒவ்வொரு மாதமும் 24ஆம் தேதி 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.