ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் பலருக்கு ஆதார் அட்டை தொலைந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

அதைத் திரும்பப் பெறவும், நகல் எடுக்கவும் சில நடைமுறைகள் உள்ளன. UIDAI தனிநபர்களின் ஆதார் எண்ணை மீட்டெடுக்க உதவுகிறது. ஆன்லைனில் ஆதார் அட்டை எண்ணைப் பெற UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்தால் போதும். நகல் ஆதார் அட்டையை ஆஃப்லைனில் பெற கட்டணமில்லா எண்ணை 1800-180-1947 அல்லது 1947-ஐ டயல் செய்யவும்.