இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் இந்திய ரயில்வே நிர்வாகம் அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கு அவர்களுக்காக தனியான இருக்கைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

குழந்தைகளுக்கான தனியாக இருக்கை அமைக்கப்பட்ட நிலையில் அதன் சோதனை ஓட்டம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கியது. இதில் சில குறைபாடுகள் காணப்பட்டதால் தற்போது இரண்டாம் கட்ட சோதனை ஓட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால் குழந்தைகளுக்கு தனியாக பெர்த் அமைக்கப்படும். மேலும் குழந்தைகளுக்கான தனியான இருக்கையில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விவரத்தை ரயில்வே நிர்வாகம் வெளியிடவில்லை.