திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் கூட்டத்தை சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே முன்பதிவு செய்ய டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையத்தில் வெளியிட்டு வருகிறது. அதேசமயம் குலுக்கல் முறை டிக்கெட் வெளியீடு மற்றும் தங்கும் மலைகளுக்கான முன்பதிவு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் பக்தர்கள் மொபைல் செயலி மூலமாக இந்த சேவைகளை செய்ய புதிய செயலை ஒன்றை தேவஸ்தானம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே இந்த சேவைகளை செய்ய கோவிந்தா என்ற மொபைல் செயலில் நடைமுறையில் இருக்கும் நிலையில் தற்போது டிடி தேவஸ்தானம் என்ற பெயரில் சோதனை முறையில் மொபைல் செயலி போன்ற செயல்பாட்டுக்கு வந்துள்ளது.