
தமிழக முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் களப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, கடந்த டிசம்பர் மாதம் புயல் காரணமாக நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் எந்த அளவுக்கு பாதிப்பை சந்தித்தது என்பது தெரியும். இதற்கு மாநில அரசு நிதியை வைத்து தான் நிவாரண பணிகளை மேற்கொண்டோம். மத்திய அரசு நிதி தரவில்லை. தமிழக அரசின் தொடர் வலியுறுத்தலால் மத்திய அரசு வேறு வழி இல்லாமல் தமிழ்நாட்டில் வந்து ஆய்வு மேற்கொண்டது.
புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள 37907 கோடி ரூபாய் நாம் கேட்ட நிலையில் அவர்கள் வேறு வழியே இல்லாமல் வெறும் 276 கோடி ரூபாய் தான் கொடுத்தார்கள். நாம் கேட்டதில் ஒரு விழுக்காடு அளவுக்கு கூட அவர்கள் கொடுக்கவில்லை. சரி பட்ஜெட்டிலாவது தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்த்த போதிலும் அவர்கள் ஏமாற்றி விட்டார்கள். தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது நீதியும் கிடைக்காது என்று ஒதுக்கி விட்டார்கள். மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசு கூட்டணியில் இருக்கக்கூடிய மாநிலங்களுக்கும் தேர்தல் வரக் கூடிய மாநிலங்களுக்கும் மட்டும்தான் நிதி ஒதுக்குகிறது. மேலும் திருநெல்வேலி அல்வாவை விட ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு கொடுக்கும் அல்வா மிகவும் பேமஸாக இருக்கிறது என்று கூறினார்.