பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷோயப் மாலிக், ஒரு தனியார் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அங்கு வந்த பெண்ணிடம் வழிந்து பேச முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

அந்த உரையாடலின் போது, மாலிக் அப்பெண்ணிடம் “நான் எப்போது தீவிரமாக இருப்பேன் அல்லது கோபப்படுவேன் என்பது உனக்குத் தெரியாது” என்று கூற, அதற்கு அந்தப் பெண் சற்றும் தாமதிக்காமல், “அதை நான் தெரிந்துகொண்டு என்ன பயன்? நீயும் திருமணமானவர், நானும் திருமணமானவள்” என்று கூறி மாலிக்கின் வாயை அடைத்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Pakistan Connect (@pakistanconnect)

“>

மூன்று திருமணங்களைச் செய்துள்ள மாலிக், பொதுவெளியில் ஒரு பெண்ணிடம் இவ்வாறு நடந்து கொண்டதும், அதற்கு அந்தப் பெண் கொடுத்த சாதுர்யமான பதிலடியும் இணையவாசிகள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.