திருத்தணி மற்றும் அரக்கோணம் மின்சார ரயில் சேவை ஜூலை 11 இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருத்தணியில் இருந்து இரவு 11.10 மணிக்கு புறப்பட்ட அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் இன்று மற்றும் ஜூலை 13ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து காலை 4 மற்றும் 5 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரயில் ஜூலை 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

அதனைப் போலவே மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரயில் ஜூலை 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் அரக்கோணம் மற்றும் திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதனைப் போலவே திருத்தணியில் இருந்து காலை 4.30 மற்றும் 5.30 மணிக்கு புறப்பட்டு மூர் மார்க்கெட் வரும் மின்சார ரயில் ஜூலை 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் திருத்தணி மற்றும் அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.