சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே ஒரு வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை ஒருவர் திருடி சென்றார். ஆனால் திடீரென அந்த திருடன் மனம் மாறி அதே வீட்டின் முன்பாக பைக்கை கொண்டு வந்து விட்டுவிட்டார். அதோடு 1500 ரூபாய் பணம் மற்றும் ஒரு மன்னிப்பு கடிதத்தையும் அதில் வைத்துள்ளார். அந்த கடிதத்தில் அவசர தேவைக்காக பைக்கை திருடி விட்டேன்.

அதில் 450 கிலோமீட்டர் தூரம் பயணித்த நிலையில் பின்னர் என் தவறை உணர்ந்து நான் இந்த பைக்கை கொண்டு வந்து விடுகிறேன். பெட்ரோல் டேங்கில் 1500 ரூபாய் பணத்தையும் வைத்துள்ளேன். நீங்கள் நிச்சயம் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டி இருப்பீர்கள். அதற்கு நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் வருந்த வைப்போம் என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் பைக்கை திருடிவிட்டு மீண்டும் கடிதத்தோடு அதே இடத்தில் பைக்கை திருடன் கொண்டு வந்து விட்டது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.