அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில், 87 வயது மூதாட்டி ஒருவரிடமிருந்து பணப்பையைப் பறித்துக் கொண்டு தப்பியோடிய திருடனை சாமர்த்தியமாகப் பிடித்து வீழ்த்திய இளைஞர் ஒருவரின் செயல் இணையத்தில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. டெஷான் பிரஸ்லி என்ற அந்த இளைஞர், மூதாட்டியின் அலறல் சத்தத்தைக் கேட்டவுடன் சற்றும் யோசிக்காமல் திருடனைத் துரத்திச் சென்று, கடையின் வெளிப்பகுதியில் அவனை மடக்கிப் பிடித்தார்.

மேலும் திருடன் தப்பிக்க முயன்ற போதிலும், மனதிடத்துடன் அவனைத் தடுத்து நிறுத்தி, காவல் துறையினர் வரும் வரை அங்கேயே சிறைபிடித்து வைத்தார். இந்தத் துணிச்சலான செயலின் மூலம் அந்த மூதாட்டியின் பணப்பை பத்திரமாக மீட்கப்பட்டு அவரிடமே ஒப்படைக்கப்பட்டது.

“>

இந்நிலையில் டெஷான் பிரஸ்லியின் இந்த மனிதாபிமான மிக்க வீரச் செயலைப் பாராட்டும் விதமாக, உள்ளூர் காவல்துறை அவருக்கு ‘சிட்டிசன்ஸ் அவார்டு’ வழங்கி கௌரவித்துள்ளது. இந்த ஆபத்தான சூழலிலும் சுயநலமின்றி முதியவருக்கு உதவிய அந்த இளைஞரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பலருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.