அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ரிவியரா கடற்கரை அருகே, கட்டவிழ்த்து விடப்பட்ட பிட்புல் ரக நாய் ஒன்று பாதசாரிகளைத் தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டின் கேரேஜ் கதவு தவறுதலாக திறந்து விடப்பட்டதால், ‘என்ஸோ’ என்ற ஒரு வயதுடைய பிட்புல் நாய் தெருவுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை ஆக்ரோஷமாகத் தாக்கியது.
இந்த கோரமான தாக்குதலில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூவர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செயின்ட் மேரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தத் தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மூவரும் குணமடைந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 people were taken to a hospital after being attacked by a pit bull in Riviera Beach, Fla. pic.twitter.com/nMgoRtULOf
— kayvan sabouri (@KayvanSabouri) December 29, 2025
“>
இந்நிலையில் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நாய் விலங்கு கட்டுப்பாட்டுத் துறையினரால் பிடித்துச் செல்லப்பட்டது. வளர்ப்பு நாய்களைக் கவனக்குறைவாகக் கையாளுவது பொதுமக்களுக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், ஜனவரி தொடக்கம் வரை அந்த நாய் கண்காணிப்பில் வைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
