சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சிவப்பு நிறப் புடவை மற்றும் உயரமான காலணிகளை அணிந்த இளம்பெண் ஒருவர், பாலிவுட்டின் மிகவும் சவாலான பாடலுக்கு ஆடிய நடனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

புடவை அணிந்து நடப்பது என்பதே சவாலான காரியம் என்ற நிலையில், நடிகர் ஹிருத்திக் ரோஷனின் கடினமான நடன அசைவுகளை மிகவும் லாவகமாகவும் வேகமாகவும் அந்தப் பெண் ஆடியுள்ளது காண்போரை திகைக்க வைத்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Ayli Ghiya (@aylighiya)

ஐலி கியா என்ற அந்தப் பெண் தான் ஒரு விழாவிற்கு விருந்தினராகச் சென்றதாகவும், அங்கிருந்த பார்வையாளர்களின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடனத்தைச் சவாலாக ஏற்று ஆடியதாகவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பெண்ணின் அசாத்திய திறமையைப் பார்த்த இணையவாசிகள், ஒருவேளை ஹிருத்திக் ரோஷன் இந்த நடனத்தைப் பார்த்தால் அவரே பெருமைப்படுவார் என்றும், இது புடவை அணிந்து ஆடப்பட்ட தூம் பாடலின் சிறந்த வடிவம் என்றும் பாராட்டி வருகின்றனர்.