இந்திய விளையாட்டு உலகின் ஜாம்பவான் மேரி கோம், தனது 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததற்கான பகீர் காரணங்களை ‘ஆப்கி அதாலத்’ (Aap Ki Adalat) நிகழ்ச்சியில் போட்டு உடைத்துள்ளார்.
“நான் யாரையும் ஏமாற்றவில்லை, அவர்தான் என்னை ஏமாற்றினார்” என்று தனது முன்னாள் கணவர் ஓன்லர் மீது அடுக்கடுக்கான புகார்களைச் சுமத்தியுள்ளார்.
“Living on a Woman’s Earnings”: Mary Kom and Ex-Husband Trade Sharp Allegations
➠ Mary Kom has sparked public debate after making strong claims against her ex-husband, Onler, over financial dependence and sacrifice during their marriage.
➠ The boxer alleged she was the sole… pic.twitter.com/LJCGt0SkU9
— Buzzpedia (@BuzzpediaNetwrk) January 15, 2026
மேரி கோம் கூறுகையில், “அவர் என் பெயரில் எனக்குத் தெரியாமலேயே கடன்களை வாங்கியுள்ளார். என் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுத்துச் செலவு செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இதையெல்லாம் தெரிந்து கொண்டபோது நான் நடுங்கிப் போனேன்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும், “அவர் எனக்காகத் தனது கால்பந்து வாழ்க்கையைத் தியாகம் செய்தார் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை.
அவருக்குத் நிலையான வேலையோ, வருமானமோ இருந்ததில்லை. என்னுடைய உழைப்பில் வந்த பணத்தில்தான் எல்லாம் கிடைத்தது” என்று அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
