திமுக அரசின் தொடர் ஊழல்கள் மற்றும் தமிழர் விரோதப் போக்குகளால் தமிழ்நாட்டு மக்கள் கடும் அதிருப்தியிலும், வெறுப்பிலும் உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் மக்கள் முற்றிலும் சலித்துப்போய் விட்டனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, மதுபான ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஆளுங்கட்சியினர் தொடர்ந்து பேசி வரும் தமிழ் விரோத மற்றும் தேச விரோத கருத்துகளால் மக்கள் மிகவும் வெறுப்படைந்துள்ளனர் என்றும் பியூஷ் கோயல் அந்தப் பேட்டியில் ஆவேசமாகத் தெரிவித்தார்.