சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் ஆளுநர் சார்பில் ராஜ் பவனில் தேநீர் விருந்து அளிக்கப்படும். அந்த விருந்தில் முதலமைச்சர், ஆளுங்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினர் ஆகியோர்கலந்து கொள்வார்கள். இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என் ரவி சார்பில் தேநீர் விருந்துக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் மீது இருந்த அதிருப்தி காரணமாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தேநீர் விருந்து புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.

தமிழக அரசு சார்பில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் யாரும் கலந்து கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளார். இது பற்றி தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.