புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக தெற்கு மாவட்ட பூத் லெவல் மற்றும் டிஜிட்டல் ஏஜெண்ட்கள் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே ஏற்பட்ட கூட்டணி குறித்து தனது கடுமையான கருத்தை பதிவு செய்தார்.
அவர் தெரிவித்ததாவது, “முன்னர் பாஜகாவோடு கூட்டணி இல்லை என்று சொன்னவர்களே இப்போது அந்த பாஜகவுடன் கைகோர்க்கிறார்கள். அதையும் தவிர, பாஜகா ஒரு நல்ல கட்சி என்றும் நன்மை பயக்கும் கட்சி என்றும் பேசுகிறார்கள். ஆனால், உண்மையில் அன்றைய பாஜக நல்ல கட்சி தான், இன்றைய பாஜக நல்ல கட்சி இல்லை” என்று கேள்வி எழுப்பினார்.
அதிமுக தொண்டர்களே பாஜகாவுடன் கூட்டணி வைத்திருப்பது நெஞ்சுக்கு ஏற்கவில்லை என்றும், அதனால் தான் எடப்பாடி பழனிசாமி பாஜகாவை நன்மை பயக்கும் கட்சியாக மாற்றி பேசுகிறார் என்றும் நேரு குற்றம் சாட்டினார். “திமுக கூட்டணி வைத்தால் அது குற்றமா? அதிமுக வைத்தாலே தூக்கி எறியலாமா? இது என்ன லாஜிக்?” என்றும் கேள்வி எழுப்பினார்.
