
திமுக கூட்டணி ஒரு மாயை, அது எப்போது வேண்டுமானாலும் உடைந்து சிதறும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அதிமுக நாற்பது இடங்களிலும் வலுவான தடம் பதித்துள்ளது. திமுக என்பது ஒரு மாயை, திமுகவிற்கு தனியாக ஓட்டு வாங்கி கிடையாது. முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை பாதுகாப்பாக வழி நடத்துகிறார்.
அதிமுக இயக்கத்தை சிலர் சூழ்ச்சி வலை செய்து youtube இல் பேசி பிரச்சனை செய்து கட்சியை அழிக்கலாம் என்று கணக்கு போட்டால் அந்த கணக்கு நடக்காது. அதிமுக அழிவின் விளிம்பு வரை சென்றாலும் கடைசி நேரத்தில் வெற்றி பெறும் ஆற்றல் உடைய கட்சி. திமுகவுக்கு தைரியம் இருந்தால் தனித்துப் போட்டியிட தயாரா என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதேசமயம் 2026 இல் இபிஎஸ் முதல்வராவது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.