திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 18) துரைமுருகனை அவரது வீட்டில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அந்த நேரத்தில் துரைமுருகன் கையில் கட்டு போட்டிருந்தது கவனிக்கப்பட்டதால், அவருக்கு கையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது அமைச்சரவைத் தோழரான ஏவ. வேலு உடன் இருந்தார். முதல்வரின் இந்த நேரடி நலம் விசாரணை திமுக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. துரைமுருகனின் உடல்நலன் விரைவில் மேம்பட வேண்டும் என திமுக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்