மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என திருப்பூர் துரைசாமி உள்நோக்கத்துடன் பேசுகிறார் என்று வைகோ கூறி இருந்தார். அதற்கு துரைசாமி மதிமுகவுக்கு எதிர்காலம் என்று ஒன்று கிடையாது, அதனால் இப்போதே திமுகவின் சேர்வது நல்லது, திமுகவிற்கு ஆதரவு அளிப்பேன், ஆனால் கட்சியில் இணைய மாட்டேன் என அறிவித்தார். மேலும் மதிமுக எனும் கட்சியை தொடங்கிய நோக்கம் தற்போது இல்லை பலவீனம் அடைந்துள்ளது.

கிளை கழகம் அமைக்க 100 பேர் உறுப்பினர்களாக தேவை. ஆனால் பொய்யான பெயர்களை பதிவு செய்து ஏமாற்றி வருகிறார்கள்.எனது கேள்விக்கு பதில் சொல்ல முடியாததால் என்னை பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்று வைகோ சொல்கிறார் என துரைசாமி விமர்சித்துள்ளார்.