
ஆறு மாதங்களில் வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு விவகாரத்தில் திமுக மாஸ்டர் பிளான் போட்டு உள்ளது. அதன்படி 39 தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம் ஆகியவை தலா இரண்டு, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 1 என 18 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகின்றது. கடந்த முறை இந்திய ஜனநாயக கட்சிக்கு அழைத்த சீட் இந்த முறை மக்கள் நீதி மையத்திற்கு அழைக்கப்படலாம். மீதமுள்ள 20 இடங்களில் திமுகவே போட்டியிடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.