செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதெல்லாம் கொடுமை. நாங்கதான் படிக்க வச்சோம், நாங்க தான் கல்வி கொடுத்தோம். நாங்க வந்து கொடுக்கலைன்னா… சீமான் எல்லாம் படிச்சு இவ்வளவு பேசி இருப்பானான்னு சொல்லுறானுங்க. படிக்க வச்சவன் படிக்காதவன் என் தாத்தா காமராஜ். தெருவுக்கு இரண்டு டாஸ்மாக்கை திறந்து குடிக்க வைத்து அயோக்கியன் நீங்க…

உனக்கென்ன ஆசிரியர் பற்றி ? ஆசிரியர் மதிப்பு உனக்கு என்ன தெரியும்? அன்பில் மகேஷ் ஒரு ஆசிரியரிடம் படித்திருப்பாரு இல்ல.  ஆசிரியரின் மதிப்பு, பெருமை தெரியாதா ? ரூ 5 கேட்கிற இடத்தில் 2 ரூபாய் 50 காசு கொடு. பத்து ரூபா கேட்குற இடத்துல 5 ரூபாய் கொடு. ஒரு வருஷம் முடியாது என்கிறதுல,  ஒரு வருஷம் கொடுங்க.  எல்லாத்துக்கும் நிதி இல்லை, நிதியில்ல, சமாதி கட்ட நிதி, பேனா கட்ட நிதி, பல்நோக்கு மருத்துவமனை கட்ட நிதி, நூலகம் கட்ட நிதி.

ஹேய்.. உண்மையில் மனசான்று தொட்டு சொல்லுங்க. தேர்தலுக்கு ஓட்டுக்கு காசு கொடுப்பீங்களா ? இல்யா. நிதி இல்ல தான…  கொடுப்பீங்களா ? இல்லையா ? எத்தனை ஆயிரம் கோடி கொடுத்தீங்க. ஈரோடு கிழக்குத் தேர்தலில் மட்டும் எத்தனை கோடி கொடுத்தீங்க ?  சொல்லுங்க. இன்னைக்கு ஒவ்வொரு குடும்ப தலைவிக்கு நாங்க ரூ.1000 கொடுக்கிறோம்னு சொல்றீங்க, அது தகுதி பார்த்து கொடுக்குறீங்க.

எங்க அம்மா, எங்க அக்கா, தகுதி பாக்க நீ யாரு முதல்ல  சொல்லு ? உனக்கு என்ன தகுதி இருக்கு. சரி கொடுத்த…  அந்த காசு எங்கிருந்து எடுத்து கொடுத்த..  இன்னைக்கு  RTI தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டால் ? ஆதி தமிழ் குடிகளுக்கு,  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வந்த நிதியில் எடுத்து,  நீங்க கொடுத்துட்டு போயிட்டீங்க…

ஐயோ கொடுமையை..  இதெல்லாம் என்ன சொல்ல முடியும் ?  கண்ணீரைத் தவிர இவரிடம் வேற எதுவும் இல்லை. கேட்டால்  நாங்க குரல் அற்றவர்களின் குரல்.  அடிமைங்கிறவன் யாரு ? உரிமைக்காக பேச முடியாமல்,  குரல் கொடுக்காதவனும் அடிமைதான். அவனுக்காக   பேசாதவன் அடிமைதான் என தெரிவித்தார்.