தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காகவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்காகவும் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை, தற்போது அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு அதிரடியாக மாற்றம் செய்துள்ளது.

மேலும் இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ ‘X’ சமூக ஊடகப் பக்கத்தில், ‘நான் முதல்வன்’ என்ற பெயர் நீக்கப்பட்டு, தற்போது ‘TN Skill Corporation’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த திடீர் நடவடிக்கை அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பரவலான கவனத்தையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பெயர் மாற்றத்தோடு மட்டுமன்றி, இத்திட்டத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் மேலும் சில முக்கிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மே 15-ம் தேதிக்கு முன்பாக அத்திட்டம் தொடர்பாகப் பதிவிடப்பட்டிருந்த அனைத்து பழைய பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிய அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கருதப்படும் வேளையில், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் எவ்வித தொய்வுமின்றி ‘TN Skill Corporation’ என்ற புதிய பெயரின் கீழ் தொடர்ந்து தொய்வின்றிச் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.