தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பயணம் சமீபத்தில் தொடங்கிய நிலையில் நேற்று சிவகங்கையில் நடைபெற்றது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, மக்களை சந்தித்து மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களது ஒன்பதாண்டு கால சாதனைகளை கூறும் நமது பயணத்தின் பெயர் என் மண் என் மக்கள். மத்திய அரசின் மக்களுக்கான நலத்திட்டங்கள், அதன் மூலம் பயனடைந்த இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் என கோடி கணக்கானோர் நம்முடன் இருக்கின்றனர். ஆனால் திமுக ஒரு நடைப்பயணம் என்றால் அதன் பெயர் என் மகன் என் பேரன் என்பதாகத்தான் இருக்கும் என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.