இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி பெண்கள் பயன்பெறும் விதமாக ஆதார் ஷீலா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் நீங்கள் தினந்தோறும் 87 ரூபாய் டெபாசிட் செய்தால் ஒரு ஆண்டுக்கு 31 ஆயிரத்து 755 ரூபாய் வரை சேமிக்கலாம்.

அதே பத்து ஆண்டுகளில் 3,17,550 உங்களுக்கு பாலிசி கணக்கில் இருக்கும். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 70 வயது பூர்த்தி அடையும் வரை நீங்கள் தொடர்ந்தால் முதிர்வு காலத்தில் உங்களுக்கு 11 லட்சம் வரை திரும்ப கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் பாலிசிதாரர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தால் இந்த தொகையானது அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.