தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். நெல்லிக்காயில் விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளதால் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளிலும் இது முக்கிய இடம் வகிக்கிறது. ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை ஊக்குவிக்கவும் நெல்லிக்காய் முடி வளர்ச்சியை பலப்படுத்துவது மட்டுமல்லாமல் கண் பார்வை திறனையும் மேம்படுத்துகின்றது. ரத்தத்தை இது சுத்தப்படுத்துவதால் முகப்பரு, சருமம் வறண்டு போகுதல் மற்றும் சொறி சிரங்கு என சரும வியாதிகள் எதுவும் வராமல் தடுக்கும்.

தலைமுடியை கருமையாக செழிப்பாக வளர வைக்க இது உதவும் என்பதால் எண்ணெய் வகைகளிலும் தலை சாய தயாரிப்புகளிலும் நெல்லிக்காய் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. மேலும் அசிடிட்டி மற்றும் வயிற்று உப்புச பிரச்சனை என இழப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது. சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். நெல்லிக்காயில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கும் இது துணை புரிகிறது. அதிக உடல் எடை உள்ளவர்கள் உடல் பருமனை கட்டுப்படுத்த காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறுடன் இஞ்சி சாறு அருந்தினால் தேவையற்ற எடை குறைந்து அழகிய தோற்றத்தை பெறுவீர்கள்.

இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்கும். வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கொழுப்பை குவிக்காமல் உடல் ஆற்றல் அளவை அதிகரிக்க செய்யும். இதில் குரோமியம் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கும். அதேசமயம் தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் சிறுநீர் கழிக்கும் போது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதிகப்படியான வீக்கம், சிறுநீர் தொற்று மற்றும் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கவும் உதவுகிறது.