இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடரில் குஜராத் டைட்டன்ஸின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தென் ஆப்பிரிக்காவின் காகிஸோ ரபாடா, 2 போட்டிகளில் விளையாடியதன் பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பியுள்ளார்.
கடந்த புதன்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(RCB ) அணிக்கெதிராக நடந்த போட்டியில் அவர் அணியில் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியது. தொடக்க ஓட்டத்தில் சுப்மன் கில், ரபாடா அணியில் இல்லையென கூறியிருந்தார். இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, அவர் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ரபாடா இல்லாததும் அணிக்கான பெரிய இழப்பாக கருதப்படுகிறது. அதேசமயம், அவரது பந்துவீச்சுத் குஜராத் டைட்டன்ஸ் அணி பக்கபலமாக இருந்தது . ஆஷிஷ் நெரா தலைமையிலான அணி, கடந்த மேகா ஏக்ஷனில் சிறந்த வேகப்பந்து வீரர்களை தேர்ந்தெடுத்திருந்தது. ரபாடா இல்லாவிட்டாலும், முகமது சிராஜ் மற்றும் அர்ஷத் கான் ஆகியோர் பெங்களூரு அணிக்கு எதிராக பந்துவீச்சில் சிறந்த பந்து வீச்சு மூலம் அணியை நம்பிக்கையுடன் வைத்துள்ளனர். தற்போது 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன், GT அணி லீக் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
