பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களிலேயே பயணிகளுக்கு தேவையான உணவு வகைகளும் கிடைக்கிறது.

இந்த நிலையில் ரயில் நிலையங்களில் உள்ள உணவு நிலையங்களில் உணவு வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, டீ, காபி விலை 10ல் இருந்து 15ஆகவும், 4 சப்பாத்தி 29ல் இருந்து 45ஆகவும், சாம்பார் சாதம் 20ல் இருந்து 30 ஆகவும் என அனைத்து உணவு வகைகளின் விலை பட்டியலை மாற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், இந்த விலை விரைவில் அமலுக்கு வரும். ஜன.,16ல் உணவு வகைகளின் விலையை உயர்த்தி ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டருந்தது.