அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஏதாவது வீடியோக்கள், ரீல்ஸ்கள் பாடல்கள் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில் சமீப காலமாக என்ன மொழி என்றே தெரியாத பல பாடல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போல ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என அர்த்தம் புரியவிட்டாலும் அந்த பாடலுடைய இசைக்காக ஏராளமான பிறமொழி  பாடல்களும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் திடீரென்று “ஆனா அனா பதியே”  என்று தொடங்கும் ஒரு பாடல் இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது. சமூக ஊடகத்தில் எங்கு பார்த்தாலும் இந்த பாடல் தான் இருக்கிறது. இந்நிலையில் இந்த பாடல் ஆனது தாய்லாந்து பாடல் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் வரிகள் புரியாவிட்டாலும் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.