மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், சினிமா படத்தையே மிஞ்சும் அளவுக்கு ஒரு அதிரடிச் சம்பவம் நடந்துள்ளது. ‘சட்டவிரோத கும்பல்’ (Illegal Gang) என்ற பெயரில் 2018 முதல் ரவுடி சாம்ராஜ்யம் நடத்தி வந்த ஆகாஷ் என்பவருக்கும், சீமா என்ற பெண்ணுக்கும் கோலாகலமாகத் திருமணம் நடந்து கொண்டிருந்தது. கழுத்தில் ‘சட்டவிரோத கும்பல்’ என பச்சை குத்திய 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் புடைசூழ, கெத்தாகத் தாலி கட்டத் தயாரானார் ஆகாஷ். ஆனால், அங்குதான் ஒரு ட்விஸ்ட்! மதபோதகர் ஒருவரைக் கடத்தி ரூ. 8 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில், மண்டபத்திற்குள் அதிரடியாகப் புகுந்த போலீஸார் ஆகாஷை வளைத்துப் பிடித்தனர்.

​மாப்பிள்ளை கைது செய்யப்படுவதைப் பார்த்த மணப்பெண் சீமா, “என் வாழ்க்கை நாசமாயிடும்.. தாலி கட்டும் வரை 2 மணி நேரம் மட்டும் அவரை விட்டுடுங்க!” என போலீஸாரின் காலைப் பிடித்து கதறி அழுதுள்ளார். “காவல் நிலையத்திலாவது கல்யாணம் நடக்க அனுமதியுங்கள்” என அவர் வைத்த உருக்கமான கோரிக்கையை போலீஸார் கொஞ்சமும் மதிக்கவில்லை. பா.ஜ.க பிரமுகர் கொலை வழக்கு உட்பட 31 வழக்குகள் நிலுவையில் உள்ள ஆகாஷை, அவரது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்த்து அப்படியே அள்ளிச் சென்று சிறையில் அடைத்தனர் போலீஸார். கல்யாணக் கொண்டாட்டத்தில் இருந்த மண்டபம், ரவுடி மாப்பிள்ளையின் கைதால் சுடுகாடு போல நிசப்தமானது.