தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த 2012 வருடம் மெரினா என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக முதன்முதலாக அறிமுகமானர். அதனை தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தற்போது உச்சம் தொட்ட நடிகராக வளர்ந்து உள்ளார். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார் இவருக்கு ஆர்த்தி என்பவரோடு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளது.

இந்நிலையில் திருமணத்தின்போது சிவகார்த்திகேயன் ஆர்த்தி கழுத்தில் தாலிக்கட்டும் போது எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரு கின்றது.இதனை பார்த்த இணையவாசிகள், திருமண மேடையிலும் சிவா அண்ணா ஜோக் பண்ணுறாரே.. என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.