
நாடு முழுவதும் தக்காளி விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதனால் தக்காளி திருட்டு போன்ற சம்பவங்களும், தக்காளியால் பிரிந்த குடும்பமும் என ஒரு சில வினோதமான சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அதனால் தக்காளியை பாதுகாக்க வியாபாரிகள் பல புதுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் தக்காளி தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு வீட்டில் வைக்கப்பட்டுள்ள தாக்காளிக்கு அருகில் நல்ல பாம்பு ஒன்று இருப்பதும், தக்காளியை தொட முயன்றால் பாம்பு கடிக்க முயல்வதும் போல வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை.
View this post on Instagram