வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கேமரா பேட்டையைச் சேர்ந்தவர் ரோகித்(28). இவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு பேபி ஷாமினி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த 6-ஆம் தேதி ஷாமினி ஒதியத்தூரில் இருக்கும் தனது தாய் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ரோகித் யாரிடமும் பேசாமல் இருந்தார். கடந்த 8-ஆம் தேதி ரோகித் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ரோகித் மீண்டும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற ரோகித்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.