குழந்தைகளுக்கு தாய்ப்பாலை விட சிறந்த ஆகாரம் எதுவும் இல்லை என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். இதனால் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்துவதும் உண்டு. இதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் கிடைக்கும் என்றும் ஆரோக்கியமாக குழந்தைகள் வளருவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் தாய்ப்பாலில் ப்ரோமோபீனால்கள் எனப்படும் நச்சுச்சுடர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது வீட்டில் இருக்கும் மின்னணு சாதனங்கள எரிவதை தடுக்க பயன்படுத்தப்படும் நச்சு ரசாயனங்கள் ஆகும். 50 தாய்மார்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில் இத்தகைய அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது.