கடந்த மாதம் மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சென்று இருந்தார். அங்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றியதோடு வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனையும் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேசி உள்ளார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்து பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் பற்றி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் “இந்திய பிரதமரின் கடந்த மாத அமெரிக்க பயணம் வெற்றிகரமாகவும் முக்கியமானதாகவும் இருந்தது. முன் எப்போதும் இல்லாத அளவு இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு வலிமை பெற்றுள்ளது. இந்த பயணத்தில் இரு நாடுகளிடையே பல ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. நீண்ட எதிர்காலம் மற்றும் இந்தியா உடனான உறவு குறித்து அமெரிக்க அரசு அதிக நம்பிக்கையில் இருக்கிறது. இந்த உறவு எப்போதும் தொடரும் என நாங்கள் நம்புகிறோம்” என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜீன் பியர் குறிப்பிட்டுள்ளார்.