ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸ், போலந்து, இத்தாலி, கிரீஸ் ஜெர்மனி போன்ற நாடுகளில் வெப்பநிலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. இது அடுத்த வாரம் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே இத்தாலியின் 16 நகரங்களில் அதிக வெப்பம் காரணமாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு காலை 11:00 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் வீட்டில் இருந்து வெளியில் வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 46 டிகிரி வெயில் இத்தாலியில் பதிவாகியுள்ளதால் அதிக அளவு அனல் காற்று வீசி அந்நாட்டு மக்களும் சுற்றுலாப் பயணிகளும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வாட்டி எடுக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள பொது குடிநீர் குழாய்களில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து தண்ணீர் பிடித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.