சோசியல் மீடியாவில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு ஏரிக்கு அருகில் இளம்பெண் தனது மகனுடன் நின்று கொண்டிருந்தார்.

ஏரியை ரசித்துக் கொண்டிருந்த போதே அந்த சிறுவன் தனது தாயின் கையை உதறிவிட்டு திடீரென ஏரியில் குதித்தான். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் தனது மகனை தடுக்க முயன்றார். அதற்குள் அந்த சிறுவன் தண்ணீரில் குதித்து விட்டான். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரில் குதித்து அந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர்.