நீண்டகாலம் கணவருடன் உடலுறவு வைத்துக்கொள்ள மனைவி மறுப்பது, மனதளவில் கொடுமைப்படுத்தும் செயல் என்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2006ஆம் ஆண்டு திருமணமான 16 நாட்களில், தான் வெளிநாடு செல்லும் வரை உடலுறவுக்கு மனைவி சம்மதிக்காததால் கணவர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் விவாகரத்து தர மறுத்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. அந்த உத்தரவில், உடல்ரீதியிலான காரணங்கள் ஏதும் இல்லாமல் நீண்ட காலமாக கணவருடன் உடலுறவு வைத்துக்கொள்ள மனைவி மறுப்பதும், விவாகரத்து தர மறுப்பதும் மனதளவில் கொடுமைப்படுத்தும் செயல்தான். இதனை காரணமாக சொல்லி விவாகரத்து பெறலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.