இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மயமாகிவிட்டதால் அனைத்து வேலைகளும் வீட்டிலிருந்தபடியே முடிந்து விடுகிறது. இதுஒருபுறமிருக்க மற்றொரு புறம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. சமீப காலங்களில், சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை அதிகளவில் ஏமாற்றி வருகின்றனர். இதன் காரணமாக தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலர், டெலிகாம் நிறுவனத்தில் இருந்து அழைப்பது போல் மக்களுக்கு போன் செய்து, *401# டயல் செய்து, குறிப்பிட்ட மொபைல் எண்ணை உள்ளிடச் சொல்கிறார்கள்.

இது போன்ற போலியான அழைப்புகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிலும் அவசரப்பட வேண்டாம் என தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது.