தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ளதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மாணவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு நடிகர் விஜய்க்கு மிக அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது அக்கட்சி பல ஆச்சரியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் திமுக கூட்டணியில் இருந்துகொண்டே, விஜய்யின் அரசியல் வருகை குறித்து வைகோ இப்படி ஒரு கருத்தைக் கூறியிருப்பது தற்போதைய அரசியல் சூழலில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
