நடிகர் கேபிஒய் பாலா, புதுச்சேரியில் ‘தேடல் சேவகன்’ என்ற சேவை அமைப்புக்கு இன்று இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார். இந்த ஆம்புலன்ஸை மக்கள் எவ்வித கட்டணமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். பணம் சம்பாதிப்பதன் நோக்கம் அதை மக்கள் சேவைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பது தான் நோக்கம்.
மேலும், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ (தவெக) சேரும் திட்டம் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தனக்கு அரசியல் நோக்கம் ஏதுமில்லை என்றும், கடைசிவரை தொடர்ந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் நடிகர் கேபிஒய் பாலா பதில் அளித்தார்.
