தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் களத்தில் இறங்கிய பிறகு, நடிகர் விஜய் தனது முதல் வாக்கினை நீலாங்கரை வாக்குச்சாவடியில் இன்று பதிவு செய்தார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது சைக்கிளில் சென்று வாக்களித்து இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன விஜய், இந்த முறை தனது காரிலேயே வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அவர் கட்சித் தலைவராகப் போட்டியிடாவிட்டாலும், அவர் வாக்களிக்க வந்த தருணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
#WATCH | Tamil Nadu Elections 2026 | Vijay, TVK chief and candidate from Tiruchirappalli East and Perambur constituencies, at a polling station in Chennai after casting his vote. pic.twitter.com/yCXPjQyJEh
— ANI (@ANI) April 23, 2026
வாக்களித்துவிட்டு விஜய் வெளியே வந்தபோது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். இதனால் அந்த இடத்தில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் சிரமப்பட்ட நிலையில், இறுதியில் விஜய்யை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அவரது காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். தவெக தலைவராக விஜய் முதன்முறையாக வாக்களித்த இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.
