சின்னத்திரையில் பிரபலமான நடிகையும், ஜீ தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவருமான சாந்தினி பிரகாஷ், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ளார். ஏற்கனவே ‘கூமாப்பட்டி தங்கப்பாண்டி’ உள்ளிட்ட தொடர்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர், தனது அரசியல் பிரவேசத்தை தவெக மூலம் தொடங்கியுள்ளார்.
இந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் வகையில், தனது தவெக உறுப்பினர் அட்டையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சாந்தினி. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் பதிவு, சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
தவெக தலைவர் விஜய்யின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு நடிகை சாந்தினி இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் சட்டமன்றத் தேர்தல் களத்தில் இவர் எந்த மாதிரியான பிரச்சாரங்களை மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு தவெக தொண்டர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
