தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி நவம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (த.வெ.க.) பங்கேற்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள த.வெ.க.வுக்கு தி.மு.க. அழைப்பு விடுத்திருந்த போதிலும், இது தி.மு.க. சார்பில் நடத்தப்படும் கூட்டம் என்பதால் பங்கேற்கப் போவதில்லை என்று த.வெ.க. முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக, தமிழக அரசு சார்பில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டிருந்தால் த.வெ.க. பங்கேற்றிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக, தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான தமிழக அரசு நடத்திய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் த.வெ.க. பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
