லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்யும் “தளபதி 67” திரைப்படத்தின் சூட்டிங் அண்மையில் சென்னையில் தொடங்கியது. இப்படத்தில் விஜய் உடன் திரிஷா, அர்ஜுன், சஞ்சய்தத், கௌதம் மேனன், மிஷ்கின் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அண்மையில் கோயம்புத்தூரில் “மைக்கேல்” பட விழாவில் கலந்துகொண்ட லோகேஷ் வரும் பிப்ரவரி 1,2,3 போன்ற தேதிகளில் தளபதி 67 பட அப்டேட் வெளியாகும் என அறிவித்திருந்தார். தற்போது இது குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி,  இந்த படத்தின் புரோமோ வீடியோ பிப்,.3 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதோடு  படத்தின் தலைப்பும் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.