தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த மாதம் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி 250 கோடி வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடியது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்த நிலையில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் ஓட்டிட்டு ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி அமேசான் பிரைம் தளத்தில் வாரிசு திரைப்படம் பிப்ரவரி 22-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.