மீண்டும் படப்பிடிப்பில் சமந்தா இணைந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. சமந்தா சென்ற சில மாதங்களாக மயோசிட்டிஸ் என்ற அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மீண்டும் படபிடிப்பில் இணைந்திருப்பதாக கூறப்படுகின்றது.
சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் தெலுங்கில் நடித்து வரும் திரைப்படம் குஷி. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் தான் சமந்தா பங்கேற்க இருப்பதாக கூறப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் இயக்குனர் சமந்தாவை மகிழ்ச்சியுடன் படக்குழுவினர் வரவேற்று கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.