நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதாக அவரது நடிப்பில் வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை குழுவின் சான்றிதழ் தாமதத்தால் திட்டமிட்டபடி பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, விஜய்யின் பிளாக்பஸ்டர் வெற்றித் திரைப்படமான ‘தெறி’ மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனால் ஏற்கனவே சில காரணங்களால் தள்ளிப்போன இந்த ரீ-ரிலீஸ், தற்போது வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அதே சமயம், ‘தெறி’ திரைப்படம் பிப்ரவரி 20-ஆம் தேதி மீண்டும் வெளியாவதால், விஜய்யின் புதிய படமான ‘ஜனநாயகன்’ இந்த மாதத்தில் வெளியாக வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் ‘ஜனநாயகன்’ படத்திற்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இது சிறிய வருத்தத்தை அளித்தாலும், தங்களுக்குப் பிடித்தமான ‘தெறி’ படத்தை மீண்டும் திரையில் கொண்டாடும் முனைப்பில் அவர்கள் தயாராகி வருகின்றனர். விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்த இப்படத்தின் மறு வெளியீடு தியேட்டர்களில் திருவிழா கோலத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.