தமிழக வெற்றி கழகத்தின் தலைமை மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் கட்சியிலிருந்து விலக இருப்பதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது. இதற்கு ஏற்கனவே செங்கோட்டையன் விளக்கம் கொடுத்த நிலையில் பத்திரிகைகள் பொறுப்பறிந்து செய்தி போட வேண்டும் எனவும் தளபதி தன் நெஞ்சத்தில் நிறைந்து இருப்பதாகவும் விளக்கம் கொடுத்திருந்தார்.
அதன் பிறகு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட நிலையில் என் ஆனந்த் மற்றும் செங்கோட்டையனுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக மீண்டும் ஒரு செய்தி பரவியது. இதற்கு இன்று புஸ்ஸி ஆனந்த் விளக்கம் கொடுத்தார். அதாவது கட்சியில் சிறு சிறு சண்டைகள் வருவது வழக்கம் தான். ஆனால் தளபதி குடும்பத்தில் அந்த சிறிய சண்டைக்கு கூட இடமே இல்லை என்றார்.
மேலும் எங்களுக்குள் எந்தவிதமான சண்டையும் கிடையாது எனவும் தளபதி விஜயின் குடும்பத்தில் அனைவருமே சாதாரண தொண்டர்கள் தான் என்றும் கூறினார்.
