தமிழ் சினிமாவில் கடந்த காலங்களில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படங்களை தற்போது ரீ ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, சிவா மனசுல சக்தி, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், கில்லி உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் 20 வருடங்களை கடந்த நிலையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை புரிந்துள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடித்த பில்லா திரைப்படம் அஜித் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி ரீ ரீலிஸ் செய்யப்படுகிறது. மேலும் இது அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.