தமிழ் சினிமாவில் இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன் உழைப்பாளர்கள் தினம் என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 22ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவின் போது இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன் பேசினார். அவர் பேசியதாவது, வெற்றிமாறன், பா. ரஞ்சித், மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்புராஜ், நலன்குமாரசாமி மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சிறிய படங்களின் மூலம் தங்களின் நிரூபித்தவர்கள். ஆனால் இவர்கள் தங்களுடைய அடுத்தடுத்த படங்களில் சிறிய நடிகர்களுடன் பணியாற்றாமல் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். இது சொம்பு தூக்குவது மற்றும் பல்லுக்கு தூக்குவது ஒன்று இருக்கிறது.

படத்தின் வசூல் மட்டும் பின்னால் சென்றால் அவர்களுடைய வாழ்க்கை நிலையாக இருக்காது. ஆனால் இது பாரதிராஜா ஒரு சாதாரண வளையல் கடையில் இருந்தவரை ஹீரோவாக்கினார். இதேபோன்று கர்நாடகாவில் இருந்து வந்தவரை பாலச்சந்தர் ஹீரோவாக்கினார். அதனால்தான் அவர்கள் எல்லோரும் இன்றளவும் பேசப்படுகிறார்கள். இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அது தவறு கிடையாது. ஆனால் சினிமாவில் 100 கோடி சம்பளம் வாங்குபவர்கள் சக நடிகர்களுக்கோ கலைஞர்களுக்கு எதுவும் செய்யாமல் அரசியலுக்கு வருகிறார்கள். இதற்குக் காரணம் ஆயிரம் கோடியை நோக்கி நகர்கிறார்கள் என்பதுதான் அர்த்தம் என்று கூறியுள்ளார். மேலும் இவர் நடிகர் விஜயை தான் குறிப்பிட்டு பேசியுள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது.