பாதங்களைத் தொட விரும்பும் ரசிகரை நிறுத்திவிட்டு கேப்டன் தோனி  கைகுலுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராஞ்சியில் இருக்கும் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி, ஐபிஎல்லில் ஆடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். சமீபத்தில் இந்தியன் பிரீமியர் லீக் முடிந்து பல மாதங்களாக கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்தாலும், தோனி பயிற்சியை நிறுத்தவில்லை. ராஞ்சியில் உள்ள மைதானத்தில் தோனி தினமும் பயிற்சிக்கு வருகிறார். தோனி தற்போது ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தோனியின் வீடியோஒன்று  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தல தோனியை  பார்த்த உற்சாகத்தில் ரசிகை ஒருவர் அவரது பாதங்களை தொட்டு ஆசி பெற முயன்றுள்ளார். ஆனால் தோனி அவர்களை தடுத்து நிறுத்தி கைகுலுக்க அழைத்தார். அந்த பெண் தோனியுடன் சிறிது நேரம் பேசிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டு திரும்பினார். அதாவது காலில் விழ முயன்ற போது கையை நீட்டி அதனை தடுத்துள்ளார் தோனி. இதனை ரசிகர்கள் தோனியின் செயலை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்..

இந்தியன் பிரீமியர் லீக் 2023 சீசன் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. காலில் காயமடைந்த  தோனி சிகிச்சை முடித்து மீண்டும் பயிற்சியை தொடங்கினார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனியே வழிநடத்துவார் என கூறப்படுகிறது.

https://twitter.com/Jahnvish999/status/1695845643212972435